தமிழைத் தேடிக் கொண்டு செல்வது பெருமை அல்ல தலைகுனிவு குத்தாலத்தில் நடைபெற்ற தமிழை தேடி பிரச்சாரத்தில் டாக்டர் ராமதாசு பேச்சு :-
தமிழைத் தேடிக் கொண்டு செல்வது பெருமைப்படக்கூடிய ஒன்று அல்ல இது நமக்கு தலைகுனிவு குத்தாலத்தில் நடைபெற்ற தமிழை தேடி பிரச்சாரத்தில் டாக்டர் ராமதாசு பேச்சு :-
பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் சார்பில் அதன் நிறுவனர் மருத்துவர் ராமதாசு தமிழ்நாட்டில் அனைத்து துறைகளில் இருந்தும் காணாமல் போன “தமிழை தேடி” என்ற தலைப்பில் விழிப்புணர்வு பரப்புரை பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தொடங்கிய இந்த பிரச்சார பயணத்தின் ஒரு பகுதியாக மயிலாடுதுறை அருகே குத்தாலம் வீதியில் மருத்துவர் ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய டாக்டர் ராமதாசு கூறியதாவது :-
தமிழைத் தேடி என்கின்ற வார்த்தை பெருமைப்படக்கூடியது அல்ல என்றும், தமிழை தேடி என்பது அவமானப்படக்கூடியது எனவும் கூறினார்.
தமிழைத் தேடிக் கொண்டு செல்வது பெருமைப்படக்கூடிய ஒன்று அல்ல என்றும் இது நமக்கு தலைகுனிவு எனவும் தெரிவித்தார். மேலும் நமது அடையாளம் மற்றும் அன்னை தமிழை நாம் இழந்து விட்டதாகவும் தமிழ் எங்குமே இல்லை எனவும் கூறினார்.