மயிலாடுதுறை மாவட்டத்தில் மதுவிலக்கு குற்றங்களை குறைக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில் மயிலாடுதுறை, சீர்காழி மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துறை, காவல் நிலையங்கள் மற்றும் தனிப்படைகள் அமைத்தும் சோதனை சாவடிகள் மூலம் கண்காணிக்கப்பட்டு மதுவிலக்கு குற்றங்கள் பெருமளவு தடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 21.05.2024 வரை மாவட்டத்தில் 1675 மதுவிலக்கு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1688 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
44977 லிட்டர் பாண்டி சாராயம் , 3348 பாண்டி சாராய பாட்டில்கள், 3498 டாஸ்மாக் மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மதுவிலக்கு குற்றத்தில் ஈடுபட்ட 4 சொகுசு கார்கள் 18 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் தொடர் மதுவிலக்கு குற்றத்தில் ஈடுபட்ட 7 பேர் மற்றும் கஞ்சா வழக்கில் 2 பேர் உட்பட்ட 9 பேர் குண்டர் தடுப்பு காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் மதுவிலக்கு தொடர்பான புகார்கள் குறித்து இலவச தொலைபேசி எண் 10581 ஜ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் எனவும் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.