மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் கூட்டுறவு சார்பதிவாளர் வி.நடராஜன் தலைமையில் துணை ராணுவபடை வீரர் மற்றும் காவலர் புகழேந்தி தரங்கம்பாடி அருகே நண்டலாறு சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக செங்கோட்டையில் உள்ள மதுரா டிம்பர்சில் இருந்து காரைக்கால் வழியாக தரங்கம்பாடி சீனிவாசா டிம்பர்ஸ்க்கு சென்ற லாரியை சோதனை செய்தனர். அந்த லாரியில் உரிய ஜிஎஸ்டி வரி செலுத்தாமல் ரூ.3,31,338 மதிப்பிலான 19 டன் தேக்கு மரங்களை ஏற்றி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அந்த லாரியை தேக்கு மரங்களுடன் பறிமுதல் செய்து ஜிஎஸ்டி வரிவிதிப்புக்காக வணிகவரித்துறையின் துணை மாநில வரி அலுவலர் சரண்ராஜிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் வரி ஏய்ப்பு செய்ததாக கூறி மேற்படி மதுரா டிம்பர் நிறுவனத்திற்கு ஜிஎஸ்டி வரியாக ரூ.1,01,086 வரி விதிக்கப்பட்டது.