302 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த திருஆரூரான் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம்.
திருஆருரான் சர்க்கரை ஆலை நிலுவைத் தொகை 400 கோடி ரூபாயை வழங்க கோரி கடந்த 302 நாட்களாக பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகள் திருமண்டங்குடி திருஆருரான் சர்க்கரை ஆலை முன் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். எந்த முடிவும் ஏற்படாததால்
இன்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்க சென்றுள்ளனர். போராட்டத்தில் பங்கேற்க சென்ற கரும்பு விவசாயிகள் 75 பேரை காவல்துறையினர் அண்டக்குடி என்ற இடத்தில் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். கைது செய்யப்பட்ட விவசாயிகள் காவல்துறையினர் கொண்டு வந்த வாகனத்தில் ஏற மறுத்தால் வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றப்பட்டனர்.
இந்த செயலை கண்டித்து மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க மயிலாடுதுறை மாவட்ட தலைவர் சிம்சன் தலைமையில் பல்வேறு விவசாய சங்கத்தின் பிரதிநிதிகள் சேர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கைது செய்யப்பட்ட விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும், தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறைக்கு எதிராக கண்டனம் முழக்கங்களை எழுப்பினர்.