சீர்காழி சட்டைநாதர் கோயிலில் வைக்கப்பட்டுள்ள ஐம்பொன் சிலைகள், தேவார பதிக செப்பேடுகளை முதன்முறையாக பார்வையிட்ட பள்ளி மாணவ – மாணவிகள்.

செய்திகள்

சீர்காழி சட்டைநாதர் கோயிலில் வைக்கப்பட்டுள்ள ஐம்பொன் சிலைகள், தேவார பதிக செப்பேடுகளை முதன்முறையாக பார்வையிட்ட பள்ளி மாணவ - மாணவிகள். அகழ்வாராய்ச்சி பாடத்திற்காக ஆசிரியைகளுடன் நேரில் வந்து கண்டு வியந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேகத்திற்கு   யாகசாலைக்காக பள்ளம் வெட்டிய போது பூமிக்கு அடியில் இருந்து 23 ஐம்பொன் சிலைகள், தேவார பதிகம் தாங்கிய செப்பேடுகள், தங்க முலாம் பூசிய பூஜை பொருட்கள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டு  கோயிலில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. இந்நிலையில் சீர்காழி தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயிலும் 160 மாணவ – மாணவிகள் சட்டைநாதர் சுவாமி கோயிலுக்கு வருகை புரிந்தனர்.

சமூக அறிவியல் பாடத் திட்டத்தில் பழமையான சிலைகள் மற்றும் அகழ்வராய்ச்சி குறித்த பாடத்திற்காக கோயிலில் கண்டெடுக்கப்பட்ட சுவாமி சிலைகளை நேரில் பார்வையிட்டனர். சிலைகளின் தொன்மை, பழமை அதன் வரலாறு குறித்து ஆசிரியர்கள் மாணவ – மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். சுமார் 700 ஆண்டு பழமையான சுவாமி சிலைகளை ஆர்வமாக மாணவ – மாணவிகள் கண்டு ரசித்தனர்.

அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மட்டுமே பார்வையிட்டு வந்த ஐம்பொன் சிலைகள் மற்றும் செப்பேடுகளை முதன்முறையாக பாடத் திட்டத்திற்காக மாணவ – மாணவிகள் பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *