மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவிலில் கிங்ஸ் லயன்ஸ் சங்கம் மற்றும் கலைமகள் கல்வி நிறுவனங்கள் இணைந்து கண்தானம், இரத்ததானம், உடல்உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. லயன்ஸ் சங்க தலைவர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா.எம்.முருகன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
காளகஸ்திநாதபுரத்தில் உள்ள கலைமகள் கல்லூரியில் துவங்கி பேரணியானது முக்கிய வீதிகளின் வழியாக சென்று செம்பனார்கோயில் கலைமகள் பள்ளியில் நிறைவுபெற்றது. பேரணியில் பள்ளி, கல்லூரியை சேர்ந்த மாணவ – மாணவிகள் சுமார் 700-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்தானம், இரத்ததானம், உடல்உறுப்பு தானம் செய்வது குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி கொண்டு முழக்கமிட்டவாறு சென்றனர்.