ஐபிஎல் ரசிகர்களே ரெடியா? வெளியாகிறது IPL அட்டவணை.. யாருக்கு எப்போது மேட்ச்?
இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்படும் ஐபிஎல் திருவிழா கடந்த 2008 முதல் நடைபெற்று வருகிறது.
ஆண்டுக்கொரு முறை நடைபெறும் இந்த ஐபிஎல் திருவிழா, ஏப்ரல் மற்றும் மே மாதாங்களில் நடைபெறும். இம்முறை 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், கடந்த முறை ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பையை வென்றிருந்தது. சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி இரண்டாவது இடத்தை பிடித்திருந்தது. சென்னை மற்றும் மும்பை அணிகள் ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் இருந்தது கடந்த ஆண்டே முதல் முறையாக இருந்தது.
இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை இன்று மாலை 5 மணிக்கு ஸ்டார் தொலைக்காட்சியால் வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.