மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் பழமை வாய்ந்த மகாமாரியம்மன் கோவில் உள்ளது. கோயிலின் சம்வஸ்தராபிஷேக தினத்தை முன்னிட்டு 18-ஆம் ஆண்டு பால்குடம் திருவிழா இன்று நடைபெற்றது. விழாவையொட்டி விரதம் இருந்த பக்தர்கள் ஏராளமானோர் காவிரி தீர்த்த படித்துறையில் இருந்து பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோயிலை அடைந்தனர். பக்தர்கள் அளித்த பால் கொண்டு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.