மயிலாடுதுறை வட்டாரப்போக்குவரத்து துறை சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து குறுந்தகடு வீடியோ பாடலை வெளியிட்டு பார்வையிட்டு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட எஸ்பி மீனா கொடியசைத்து துவங்கி வைத்தார்:-

செய்திகள்

மயிலாடுதுறை வட்டாரப்போக்குவரத்து துறை சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து குறுந்தகடு வீடியோ பாடலை வெளியிட்டு பார்வையிட்டு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட எஸ்பி மீனா கொடியசைத்து துவங்கி வைத்தார்:-

தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா ஜனவரி 15-ஆம் தேதி முதல் பிப்.14-ஆம் தேதி வரை ஒரு மாதத்துக்கு கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் தமிழக அரசு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்புத்துறை மற்றும் மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் தேசிய சாலைப்பாதுகாப்பு மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வீடியோ குறுந்தகடு (சிடி) வெளியிடு மற்றும் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாகனம் தொடக்க நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ராம்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் ஊழியர்கள் நடித்து சாலை விபத்துக்களை தவிர்ப்பதற்கும், சாலை விதிமுறைகள் பின்பற்றவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி எடுக்கப்பட்ட வீடியோ பதிவு விழிப்புணர்வு பாடல் குறுந்தகட்டை எஸ்.பி.மீனா வெளியிட்டு ஹெல்மெட் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட பாடலை உற்றுகவனித்தால் அதில் உள்ள பொருட்கள் அனைவருக்கும் புரியும். சாலை விதிமுறைகளை பின்பற்றி விபத்தில்லாமல் நாம் வாகனம் இயக்க வேண்டுமென்று எஸ்பி மீனா அறிவுரை வழங்கினார். இதில் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். பிரச்சார வாகனத்தின் மூலம் தலைக்கவசம் உயிர்க்கவசம், தலைக்கவசம் அணிவிர் உயிரிழப்பை தவிர்ப்பீர், உரிமம் வாங்க எட்டுப்போடு உயிரைக் காக்க ஹெல்மெட் போடு, ஹெல்மெட் அணிவது பாதுகாப்பு இதுவே உனது உயிர் காப்பு, சாலையில் பேசாதே கைபேசி, எமன் வருவான் நீ யோசி, மது அருந்தி வாகனம் ஓட்டாதீர், போதையில் பயணம் பாதையில் மரணம், போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் வாகன ஒலிபெருக்கி மூலம் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பிரச்சாரம் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *