மயிலாடுதுறை அருகே ஒரே அத்தி மரத்தினால் 14 அடி உயரத்தில் மூலவர் அமைந்துள்ள வானமுட்டி பெருமாள் ஆலய பிரம்மோற்சவ தேர் திருவிழா ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு:-

செய்திகள்

மயிலாடுதுறை அருகே ஒரே அத்தி மரத்தினால் 14 அடி உயரத்தில் மூலவர் அமைந்துள்ள வானமுட்டி பெருமாள் ஆலய பிரம்மோற்சவ தேர் திருவிழா ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு:-

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கோழிகுத்தி என்ற கிராமத்தில் 14 அடி உயரத்தில் ஒரே அத்தி மரத்தில் அமைந்துள்ள வானமுட்டி பெருமாள் எனப்படும் சீனிவாச பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. பிப்பல மகரிஷிக்கு பெருமாள் காட்சி தந்த இடமாகும் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சோழர் காலத்து கட்டமைப்புடன் கூடிய இந்த ஆலயம் பித்ரு தோஷம் சனி தோஷம் நீங்கும் ஆலயமாகும். ஆலயத்தின் ஆண்டு பிரம்மோற்சவம் கடந்த நான்காம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. பெருமாள் தாயார் உடன் திருத்தேரில் எழுந்தருள திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். செண்டை மேளம், மேளதாள வாத்தியங்கள் முழங்க நான்கு ரத வீதிகள் வழியே தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வீடுகள் தோறும் அர்ச்சனை செய்து தீபாராதனை எடுத்து வழிபாடு நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *