பொதுத்தேர்வு எழுத உள்ள 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் தாய், தந்தையருக்கு பாத பூஜை செய்து ஆசிர்வாதம் பெற்றனர்.
மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான குருஞானசம்பந்தர் மேல்நிலைப்பள்ளியில் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் மாதா, பிதா, குரு, தெய்வத்தை வணங்கும் ஆசீர்வாத திருநாள்; 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் தாய், தந்தையருக்கு பாத பூஜை செய்து, குரு மற்றும் தெய்வத்திடம் ஆசிர்வாதம் பெற்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான ஸ்ரீகுருஞானசம்பந்தர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் நிகழாண்டு 200 மாணவர்கள் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொது தேர்வு எழுத உள்ளனர். மாணவர்கள் மாதா, பிதா, குரு மற்றும் தெய்வத்திடம் ஆசிபெறும் ஆசிர்வாத திருநாள் நிகழ்ச்சி பள்ளியின் சார்பில் நடத்தப்பட்டது. பள்ளி செயலர் திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவர்கள் தங்கள் தாய்தந்தையருக்கு பாத பூஜை செய்து வழிபட்டனர் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அட்சதை தூவி கண்ணீர் மல்க ஆசீர்வதித்தனர்.
தொடர்ந்து ஆசிரியர்கள் வரிசையாக நின்று மாணவர்களுக்கு மலர் தூவி வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் பள்ளியின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த தருமபுரம் ஆதீனம் 27-வது ஒரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் சரஸ்வதி தேவி படங்களின் முன்பு வணங்கி ஆசீர்வாதம் பெற்றனர். பின்னர் சுவாமிக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. பள்ளியில் முதல்முறையாக நடைபெற்ற நிகழ்வு மாணவர்கள் மத்தியில் தன்னம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்தது.