தமிழகம் முழுவதும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று முதல் துவங்கியது. தொடர்ந்து மாவட்டத்தில் மொத்தமாக 12-ம் வகுப்பு தேர்வினை 9918 மாணவர்கள் எழுத உள்ளனர். இதனிடையே காலை தேர்வு எழுத வந்த மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து மாவட்ட தலைவர் குட்டி கோபி தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் பேனா ,பென்சில் ஸ்கேல் உள்ளிட்ட எழுது பொருட்களை தளபதி விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க பள்ளி மாணவ மற்றும் மாணவிகளுக்கு நிர்வாகிகள் வழங்கினர். அதனைத் தொடர்ந்து இனிப்புகளை வழங்கி தேர்வில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்து தளபதியிடம் பாராட்டு பெற வேண்டுமென வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். பின்னர் காலில் காயம் ஏற்பட்டு பள்ளிக்கு தேர்வு எழுத வந்த மாணவனை கை தாங்கலாக நிர்வாகிகள் தேர்வரைக்கு அழைத்துச் சென்றது அனைவரது பாராட்டை பெற்றது.