மயூர நாட்டியஞ்சலி நிறைவு விழாவில் சிலப்பதிகாரத்தில் உள்ள மாதவியின் 11 வகை ஆடற்கலைகள் உள்ளிட்ட பல்வேறு இதிகாச நிகழ்வுகள் அரங்கேற்றம்.

செய்திகள்

மயிலாடுதுறையில் புகழ்வாய்ந்த மாயூரநாதர் ஆலயத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மயூர நாட்டியஞ்சலி நிறைவு விழாவில் சிலப்பதிகாரத்தில் உள்ள மாதவியின் 11 வகை ஆடற்கலைகள், கண்ணப்ப நாயனாரின் சரித்திர நாடகத்தின் நாட்டிய நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு இதிகாச நிகழ்வுகளை அரங்கேற்றம். திரளான பார்வையாளர்கள் கண்டு ரசிப்பு:-

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் சிவனை அபயாம்பிகை அம்மன் மயிலுருவு கொண்டு பூஜித்து சாப விமோசனம் அடைந்த புகழ்வாய்ந்த மாயூரநாதர் ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தில் சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் 18-ஆம் ஆண்டாக நான்கு நாட்கள் நடைபெறும் மயூர நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி கடந்த 7-ம்தேதி தொடங்கி நடைபெற்ற வருகிறது  நான்காம் நாள் நிறைவு விழா நிகழ்ச்சியில் மயிலாடுதுறை, சென்னை, கோவை, திருச்சி, உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் சிங்கப்பூர், ஆஸ்திரேலியா நாட்டிலிருந்தும் பரதநாட்டிய கலைஞர்கள்  பங்கேற்றனர்.

இதில் குறிப்பாக கண்ணப்ப நாயனாரின் சரித்திர நாடக நாட்டியமாக சிவனின் கண்ணில் இருந்து ரத்தம் வடியும் நிலையை தன் கால்களால் கண்ணப்பன் நாயனர் நிறுத்திய நிகழ்வும், மயிலாடுதுறை சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை மாணவிகள் நிகழ்த்திய  மாதவியின் 11 வகை ஆடற்கலைகளான அல்லியம், கொடுகட்டி, குடை, பாண்டரங்கம் போன்ற நின்றாடல் மற்றும் துடி, கடையம் பேடு உள்ளிட்ட வீழ்ந்தாடல், நாட்டிய நிகழ்வுகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *