மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு பேரூராட்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒன்றிய பொதுக்குழு கூட்டமானது வன்னியர் சங்க மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமையில் நடைபெற்றது. இதில் பாமக மாவட்ட செயலாளர் லண்டன் அன்பழகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எவ்வாறு செயல்படவேண்டும் என ஆலோசிக்கப்பட்டது.
மேலும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸின் வழிகாட்டுதலின்படி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் செயல்படுவது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, சுதாகர், நிர்வாகிகள் கண்ணன், இளங்கோவன் உள்ளிட்ட ஏராளமான பாமகவினர் கலந்து கொண்டனர்.