மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா ஆக்கூர் ஊராட்சியில் செயல்பட்டு வரும் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய செயலாளர் மார்க்ஸ் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், ஆக்கூரில் செயல்பட்டு வரும் உதவி மின் பொறியாளர் அலுவலகம் சரிவர செயல்படுவதில்லை, அலுவலகத்திற்கு வரும் பொது மக்களுக்கு சரிவர பதில் அளிப்பதில்லை, மின் இணைப்பிற்கு விண்ணப்பிக்கும் பொது மக்களுக்கு உரிய நேரத்தில் மின் இணைப்பு வழங்கப்படுவதில்லை, விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சீர்காழி கோட்ட செயற்பொறியாளர் விஜயபாரதி பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதியாளித்ததன் பெயரில் முற்றுகை போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.