தரங்கம்பாடி அருகே வாக்களிப்பதன் அவசியம் குறித்து தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எரிவாயு சிலிண்டர்களில் என் வாக்கு என் உரிமை என்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம். வருகின்ற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள கேஸ் ஏஜென்சிகள் மூலம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் என் வாக்கு என் உரிமை என்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட எரிவாயு சிலிண்டர்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்து தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. விழிப்புணர்வு தொடக்க நிகழ்ச்சியில் தரங்கம்பாடி வட்டாட்சியர் மகேஷ், தேர்தல் துணை வட்டாட்சியர் பாபு, மண்டல துணை வட்டாட்சியர் சக்திவேல், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.