மயிலாடுதுறையில் பேருந்தை மறித்து பயணிகள் போராட்டம்

செய்திகள்

மயிலாடுதுறையில் பேருந்தை மறித்து பயணிகள் இரண்டு மணி நேர போராட்டம்

மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இரண்டு மணி நேரமாக சிதம்பரம் மார்க்கத்திற்கு பேருந்து வராததால் பேருந்தை மறித்து பயணிகள் போராட்டம்:-

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் சிதம்பரம் மார்க்கத்திற்கு பேருந்து இரண்டு மணி நேரத்திற்கு மேலாக வராததால் ஆத்திரமடைந்த பயணிகள் பேருந்து மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை பேருந்து நிலையத்திலிருந்து வைத்தீஸ்வரன் கோவில் சீர்காழி கொள்ளிடம் வழியாக சிதம்பரம் செல்லும் பேருந்து அதிக அளவில் இயக்கப்பட்டு வருகிறது. சிதம்பரம் வழியாக சென்னை செல்லும் மார்க்கம் என்பதால் மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் கால் மணி நேரத்தில் இருந்து அரை மணி நேரத்திற்குள் எப்பொழுதும் சிதம்பரம் செல்வதற்கு பேருந்து வசதி இருக்கும்.

இந்நிலையில் இன்று இரவு 8 மணியிலிருந்து மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இருந்து சிதம்பரம் செல்வதற்கு பேருந்து வரவில்லை இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் பேருந்து நிலையத்தில் புறப்பட்ட பேருந்து வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சமம் அறிந்த மயிலாடுதுறை போலீசார் பயணிகளைவிட பேச்சு வார்த்தை நடத்தினர். தொடர்ந்து 10 மணிக்கு மேல் வந்த தனியார் பேருந்தில் ஏறி பயணிகள் சென்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் பேருந்து பற்றாக்குறையாக உள்ளதாகவும் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *