மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் அதிமுக, காங்கிரஸ், பாமக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட 17 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்கள் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் இன்று மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பாபு மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மாப்படுகை கிராமத்தில் காலை பிரச்சாரத்தை துவங்கிய அதிமுக வேட்பாளர் பாபு திறந்த வாகனத்தில் பொட்டவெளி, ஆடிய பிள்ளையார் கோவில் தெரு, திருவிழந்தூர், பரிமளா ரங்கநாதர் கோவில் மேலவீதி, வடக்கு வீதி, சன்னதி தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். திறந்த வாகனத்தில் இருந்து இறங்கி வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பொதுமக்கள் அதிமுக வேட்பாளர் பாபுவிற்கு மாலை, மலர்கிரீடம், சால்வை அணிவித்து பூக்களை தூவி வரவேற்பளித்தனர். பெண்கள் ஆரத்தி எடுத்து வாழ்த்து தெரிவித்தனர். கட்சியினர் வெற்றி வேட்பாளர் வருங்கால எம்பி என்று முழக்கமிட்டனர். இதில் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கூட்டணி கட்சியினர் இருசக்கர வாகனத்தில் வேட்பாளர் உடன் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.