மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வேட்பாளர் ம.க.ஸ்டாலின் பொறையாறு கடை வீதி காய்கறி சந்தையில் காய்கறி விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது காய்கறி கடை ஒன்றில் உள்ளே சென்று பெண்களுக்கு காய்கறிகள் எடுத்து விற்பனை செய்து நானும் ஒரு விவசாய குடும்பத்தை சார்ந்தவன் தான் என்று கூறி காய்கறிகளை விற்பனை செய்தது வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்தார்.