மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சுதாவை ஆதரித்து சுற்றுசூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் வேட்பாளர் சுதாவுடன் திறந்தவெளி வாகனத்தில் சென்று கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இருசக்கர வாகனத்தில் தொண்டர்கள் புடைசூழ வில்லியநல்லூர், தாளஞ்சேரி, மேலநல்லூர், சேத்தூர், தலைஞாயிறு, பட்டவர்த்தி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அமைச்சர் மெய்யநாதன் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது பாராளுமன்ற வேட்பாளர் சுதா பேசுகையில் ராகுல்காந்தி ஆசியோடு தமிழக முதலமைச்சரின் ஆசியுடன் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறேன் வெற்றி பெற்றால் மகளிருக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும் எனவும் 100-நாள் வேலை திட்டத்தை நகர்ப்புறத்துக்கும் விரிவாக்குவோம் எனவும் 100-நாள் வேலை திட்டத்தில் அதிகப்படியாக 400 ரூபாய் கொண்டு வருவோம் எனவும் பேசினார். வேட்பாளருக்கு மாலை, சால்வை அணிவித்து ஆரத்தி எடுத்தும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வேட்பாளருடன் மயிலாடுதுறை காங்கிரஸ் எம்எல்ஏ உடனிருந்தார்.