மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் 1743 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்புவதற்கான வாக்குப்பதிவு இயந்திரங்களின் வேட்பாளர்களின் சின்னம் மற்றும் பெயர்; பொருத்தும் பணி இன்று நடைபெற்றது. அந்த வகையில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட மயிலாடுதுறை சட்டப்பேரவை தொகுதியில் 638 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 319 கட்டுப்பாட்டு கருவிகள், 345 வாக்குப்பதிவு சரிபார்க்கும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
இதில், வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு வேட்பாளர்களின் சின்னம் மற்றும் பெயர் பொருத்தும் பணியை மயிலாடுதுறை கோட்டாட்சியரும், சட்டப்பேரவை தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான யுரேகா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.