மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா நெய்வாசல் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் மகன் சக்திவேல்(34). இவர்; சிவகங்கை இளையான்குடியை சேர்ந்த ஏஜென்ட் ராம்நாத் என்பவர் மூலமாக 2015-ஆம் ஆண்டு மலேசியா சென்று புகாரி என்பவரது உணவகத்தில் பணியாற்றி வந்தார். மாதாமாதம் சம்பளத்தை அனுப்பி வைத்ததோடு, அவ்வப்போது குடும்பத்தினரிடம் போனில் பேசிவந்தவர் 2022-ம் ஆண்டு சொந்த ஊர் திரும்பவேண்டும் என வேலைபார்த்த முதலாளியிடம் தெரிவித்தபோது பாஸ்போர்ட்டை பிடுங்கி வைத்துக்கொண்டுள்ளார்.
அதனை திருப்பிக் கேட்டதால்; அதில் இருந்து சம்பளம் கொடுக்காமல் பாஸ்போர்ட்டையும் திருப்பி கொடுக்காமல் சக்திவேலை தாக்கி தனிஅறையில் அடைத்துவைத்து துன்புறுத்துவதாக சக்திவேலுடன் வேலைபார்த்தவர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், அங்கு சக்திவேல் உள்ள நிலையில் அவரது நண்பர் யாருக்கும் தெரியாமல் வீடியோகால் மூலம் சக்திவேலின் பெற்றோருக்கு தெரியப்படுத்தியுள்ளார். இந்நிலையில், தனது மகனின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதால் அவரை உடனடியாக மீட்டு சொந்த ஊர் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.