6 வயது சிறுவன் 10 கி.மீட்டர் தொடர் ஓட்டம் ஓடியும், ஒரு நிமிடத்தில் 100 முறை புறங்கையால் தண்டால் எடுத்தும் உலக சாதனை
மயிலாடுதுறை அருகே 6 வயது சிறுவன் 10 கி.மீட்டர் தொடர் ஓட்டம் ஓடியும், ஒரு நிமிடத்தில் 100 முறை புறங்கையால் தண்டால் எடுத்தும் உலக சாதனை:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே திருவாலங்காட்டில் செய்ஷின்கான் கராத்தே கழகத்தின் சார்பில் உலக சாதனை நிகழ்வு மற்றும் தற்காப்பு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மீனாட்சி சுந்தரம் என்ற ஆறு வயது சிறுவன் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு தொடர் ஓட்டம் ஓடி உலக சாதனை படைத்தார். குத்தாலம் தேரடி பகுதியில் தொடங்கிய தொடர் ஓட்டம் 10 கி.மீட்டர் கடந்து திருவாலங்காட்டில் நிறைவடைந்தது.
பின்னர் அச்சிறுவன், ஒரு நிமிடத்தில் 100 முறை பறங்கையால் தண்டால் எடுத்தும் சாதனை படைத்தார். மேலும், அந்த சிறுவனின் கராத்தே மாஸ்டர் முருகன் என்பவர் 100 செங்கற்களை தன் கைகளில் மீது வைத்து உடைக்கச் செய்து சாதனை நிகழ்த்தினார். இவர்களது சாதனையை அகில இந்திய தற்காப்பு கலைஞர்கள் சங்கத்தினர் உலக சாதனையாக அங்கீகரித்து சான்றிதழ் வழங்கி பாராட்டினர். மேலும் இதில், கராத்தே செயல் விளக்க நிகழ்ச்சிகளான ஆயுத கலை பிரிவு, கட்டா தற்காப்பு கலை, வெறுங்கையால் ஓடு உடைத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான பார்வையாளர்கள் கலந்து கொண்டு ரசித்தனர்.