ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 50 பேர் மயிலாடுதுறை அருகே சித்தர்காட்டில் 64 சித்தர்கள் ஜீவசமாதி அடைந்த சிவாலயத்தில் சிறப்பு ஹோமங்கள் செய்து வழிபாடு.

செய்திகள்

தமிழ் மொழி, கலாச்சாரம் குறித்தும், சித்தர்கள் குறித்தும் ஆராய்ச்சி செய்வதற்காக தமிழகம் வந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 50 பேர் மயிலாடுதுறை அருகே சித்தர்காட்டில் 64 சித்தர்கள் ஜீவசமாதி அடைந்த சிவாலயத்தில் 136 மூலிகைப் பொருள்களை கொண்டு சிறப்பு ஹோமங்கள் செய்து வழிபாடு:-

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த சித்தர்காடு பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சிவ யோகநாயகி சமேத ஸ்ரீ காழி சிற்றம்பல நாடிசுவர சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் சீர்காழி சிற்றம்பல நாடிகளும் 64 சீடர்களும் சித்திரை மாத திருவோணம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆனார்கள்.  இக்கோவிலுக்கு சித்திரை மாத திருவோணத்தில் வெகு சிறப்பாக குரு பூஜை நடத்தப்படுகிறது. இந்நிலையில் இக்கோவிலுக்கு ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 50 பேர் வருகை தந்து 64 சித்தர் ஜீவ சமாதியான சிவாலயத்தில் புனித நீர் அடங்கிய கடம் பிரதிஷ்டை செய்து, 136 மூலிகைப் பொருள்களை கொண்டு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், துர்க்கை ஹோமம், பஞ்சாட்சர ஹோமம் உள்ளிட்ட ஹோமங்கள் செய்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.

 

அதனை தொடர்ந்து கோவில் உட்பிரகாரத்தை சுற்றி வந்து திருநீறு, விபூதி அணிந்து வணங்கி வழிபாடு மேற்கொண்டனர். தமிழகத்தில் இருந்து ஜப்பான் நாட்டுக்குச் சென்று கடந்த 30 ஆண்டுகளாக வியாபாரம் நடத்திவரும் கோபால் பிள்ளை சுப்பிரமணியம் என்பவரின் ஏற்பாட்டில் ஜப்பான் சிவா ஆதீனம் பால கும்ப குரு மணி மற்றும் அவரது சிஷ்யர்கள் 50 பேர் தமிழ் மொழி, கலாச்சாரம் குறித்தும், சித்தர்கள் குறித்தும் ஆராய்ச்சி செய்வதற்காக ஜப்பான் நாட்டின் தலைநகரமான டோக்கியோ உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் இருந்து தமிழகம் வந்துள்ள இவர்கள் கடந்த ஒருமாதமாக பல்வேறு கோயில்களில் ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீமத் போகர் பழனி ஆதீனம் புலிப்பாணி ஆசிரமம் சார்பாக திரு கௌதம் கார்த்திக் ஹோமங்களுக்கான ஏற்பாடுகள் செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *