மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை திருவிழந்தூரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தில் குலதெய்வகாரர்கள் மற்றும் பக்தர்கள் சார்பில் 42-ஆம் ஆண்டு பால்குட திருவிழா இன்று நடைபெற்றது. திருவிழந்தூர் நாலு கால் மண்டபம் காவிரி கரையில் இருந்து விரதம் இருந்து காப்பு கட்டிய பக்தர்கள் ஏராளமானோர் பால்குடம் எடுத்து நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக பம்பை உறுமி மேளதாள வாத்தியங்கள் முழங்க அம்மன் வேடமீட்ட நாட்டிய கலைஞர்கள் நாட்டியமாடியபடி ஆலயத்தை வந்தடைந்தனர். தொடர்ந்து பால்குடத்தை அம்மன் சன்னதியில் இறக்கி வைத்து மஹாதீபாராதனை செய்து பால் அபிஷேகம் மற்றும் கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.