தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே மயிலாடுதுறை மாவட்டத்தில் அடுத்து வரக்கூடிய நாட்களிலும் வெப்ப அலை வீச கூடும் என தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் கோடை வெயிலில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளும் வகையில் திமுக மாவட்ட சிறுபான்மை அணி சார்பில் இன்று மயிலாடுதுறையில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. இதனை நகர் மன்ற தலைவர் செல்வராஜ் திறந்து வைத்தார். சிறுபான்மை அணி மாவட்டத் துணைச் செயலாளர் அகமது சவாலியுல்லாஹ் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு நீர்மோர், சர்பத், குளிர்பானம், இளநீர் மற்றும் தர்பூசணி உள்ளிட்ட பழ வகைகள் வழங்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். இதில் ஏராளமான திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.