மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா தில்லையாடி ஆற்றங்கரை மெயின் ரோட்டில் சஞ்சய் காந்தி என்பவர் வீட்டு வாசலில் திருமலை என்ற பெயரில் பைனான்ஸ் மற்றும் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று காலை கோழி ஏற்றி செல்லும் கூண்டு வைத்த டாட்டா ஏசி வாகனம் ஒன்று அதிவேகமாக வந்து திரும்பிய போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கடையில் மோதியது. கடையின் முன்பு இரும்பு கேட் போடப்பட்டிருந்ததால் கடையில் இருந்த ஊழியர் காயம் இன்றி உயிர்த்தப்பினார்.
உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி சென்று கடையில் உள்ளே இருந்த ஊழியரை மீட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது பின்னர் இச்சம்பவம் தொடர்பாக பொறையார் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனிடையே டாட்டா ஏசி வாகனம் திருப்பத்தில் வேகமாக வந்து கடையின் மீது மோதும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.