மயிலாடுதுறை கடுவங்குடி சீதளா மகா மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா ஏப்.14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிகர நிகழ்வான 16-ஆம் நாளான இன்று திருத்தேர் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. அதனை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள மகா தீபாராதனையுடன் திருத்தேரோட்டம் துவங்கியது.
கிராம மக்கள் திருத்தேரை தங்கள் தோளில் சுமந்து வீதி உலா வந்தனர். வீடுகள் தோறும் பொதுமக்கள் பழங்கள், மாலை, புடவை, சுண்டல் போன்ற நெய்வேத்திய பொருள்களை வைத்து படையல் இட்டு வழிபாடு நடத்தினர். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.