தருமபுரம் ஆதீனத்திற்கு மிரட்டல் விடுத்த வழக்கில் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் எஞ்சியவர்களை கைது செய்ய வலியுறுத்தி இந்து முன்னணியினர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலவலகத்தில் மனு அளித்து கோரிக்கை:-

செய்திகள்

தருமபுரம் ஆதீனத்திற்கு மிரட்டல் விடுத்த வழக்கில் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் எஞ்சியவர்களை கைது செய்ய வலியுறுத்தி இந்து முன்னணியினர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலவலகத்தில் மனு அளித்து கோரிக்கை:-

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ உள்ளதாக கூறி பணம்கேட்டு மிரட்டியதாக கடந்த பிப்ரவரி 25-ம் தேதி மயிலாடுதுறை காவல் நிலையத்தில் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் பாஜக மாவட்ட தலைவர் அகோரம், செம்பனார்கோவில் கலைமகள் கல்வி நிலைய தாளாளர் குடியரசு,  சீர்காழி பாஜக முன்னாள் ஒன்றிய செயலாளர் விக்னேஷ், தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் ஆடுதுறை வினோத், ஶ்ரீநிவாஸ் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். எஞ்சிய குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் சிறையில் உள்ள பாஜக மாவட்ட தலைவர் அகோரம், குடியரசு, உள்ளிட்ட 5 பேர் ஜாமின் மனு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. பாஜக மாவட்ட தலைவர் அகோரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனு அளித்த நிலையில் குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்படாததால் ஜாமின் அளிக்க காவல்துறை ஆட்சேபம் தெரிவித்ததால் இரண்டு தடவை ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் தருமபுரம் ஆதீனம் வழக்கில் எஞ்சிய குற்றவாளிகளை கைது செய்யகோரி மயிலாடுதுறை மாவட்ட இந்து முன்னணி தலைவர் சரண்ராஜ் தலைமையில் அமைப்பினர் மற்றும் பாஜக பொறுப்பாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அவர்கள் அளித்த மனுவில் தருமபுரம் ஆதீன வழக்கில் தேடப்’படும் குற்றவாளிகளாக உள்ள தருமபுரம் ஆதீன உதவியாளர் திருவையாறு செந்தில், திமுக ஒன்றிய செயலாளர் அமிர்த விஜயகுமார், செங்கல்பட்டு மாவட்ட அதிமுக வழக்கறிஞர் பிரிவு பொறுப்பாளர் ஜெயச்சந்திரன் ஆகியோரை கைது செய்யவில்லை. இவ்வழக்கில் ஏழாவதாக சேர்க்கப்பட்ட பாஜ மாவட்ட தலைவர் அகோரம் உள்ளிட்ட பாஜகவை சேர்ந்த சிலர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்கள் கைது தடை ஆணை பெறாத நிலையில் வெளியில் உலா வருகிறார்கள். மக்கள் கண் முன்னாக உலா வருவதை நாங்கள் காண்கிறோம். அரசியல் உள்நோக்கத்தோடு பாஜகவை சேர்ந்தவர்களை மட்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக தோன்றுகிறது. எனவே காவல்துறையினர் இவ்வழக்கில் ஒருதலைபட்சமாக செயல்படாமல் எப்ஐஆர் அறிக்கையில் உள்ளவர்களில் இன்னும் கைது செய்யப்படாமல் இருப்பவர்களை உடன் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார். கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மயிலாடுதுறையில் இந்து முன்னணி சார்பாக மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *