மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் சுட்டெரிப்பதால் மக்கள் பகல் நேரங்களில் வெளியில் வரமுடியாத சூழல் நிலவுகிறது. இந்நிலையில், பொதுமக்கள் கோடையின் வெப்பத்தை சமாளிக்கும் வகையில் மயிலாடுதுறையை அடுத்த நீடூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் நீடூர் நெய்வாசல் கிளை சார்பாக நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. நீடூர் பெரிய மதகு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நெய்வாசல் ஜமாத் டிரஸ்டி நசீர் அகமது, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் பாசித் ஆகியோர் நீர்மோர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசணி ஆகியவற்றை வழங்கினர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நீடூர் நெய்வாசலை சேர்ந்த புருனை வாழ் இந்தியர்கள் செய்திருந்தனர். இதில், பாதசாரிகள், வாகன ஓட்டிகள் 1000-க்கு மேற்பட்டோர் நீர்மோர் பருகி பயனடைந்தனர்.