மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் நல சங்கம் சார்பில் கொடியேற்றி இனிப்புகள் மற்றும் நீர்மோர் வழங்கி கொண்டாட்டம்.

செய்திகள்

மயிலாடுதுறையில் மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் நல சங்கம் சார்பில் கொடியேற்றி இனிப்புகள் மற்றும் நீர்மோர் வழங்கி கொண்டாட்டம்.

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மே 1 உழைப்பாளர் தினமானது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் நல சங்க மாவட்ட தலைவர் பாலு தலைமையில் உழைப்பாளர் தின கொண்டாட்டமானது நடைபெற்றது. இதில் மாநில துணை செயலாளர் அபிநயா ஆறுமுகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சங்கத்தின் கொடியினை ஏற்றி வைத்தார்.

அதனை தொடர்ந்து புதியதாக சேர்க்கப்பட்ட உறுப்பினர்களுக்கு மாநில பொதுச் செயலாளர் குமார் சால்வை அணிவித்தும் பொது மக்களுக்கு இனிப்புகள் மற்றும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு நீர்மோர் வழங்கப்பட்டது. இதில் மாநில அமைப்பு செயலாளர் சேகர், மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *