மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இயங்கி வரும் மாவீரன் சிலம்பாட்ட கழகம் சார்பாக மே தினத்தை முன்னிட்டு 2 மணி நேர தொடர் சிலம்பம் சுற்றும் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. கொள்ளிடம் சீனிவாசா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்ற சாதனை முயற்சியில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், திருவாரூர் மயிலாடுதுறை உள்ளிட்ட 20 மாவட்டங்களைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட சிலம்பாட்ட மாணவ – மாணவிகள் கலந்து கொண்டு 2 மணி நேரம் தொடர் சிலம்பம் சுற்றி சாதனை செய்தனர். சாதனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாதனை படைத்த சிலம்பாட்ட மாணவ – மாணவிகளுக்கு சீனிவாசா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் முருகேசன் கேடயங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர்.