விபத்தில் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த மூவர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழப்பு. மற்றொரு வாகனத்தில் வந்து படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபரும் உயிரிழப்பு.

செய்திகள்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் விபத்தில் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த மூவர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழப்பு, பொறையார் போலீசார் விசாரணை :- மற்றொரு வாகனத்தில் வந்து படுகாயமடைந்த நபரும் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

கடலூர் மாவட்டம் பஞ்சாங்குப்பத்தை சேர்ந்த முகமது ஷகின், ஹரி, ஆகாஷ் ஆகிய மூவரும் நாகப்பட்டிணத்தில் விழா ஒன்றில் கலந்து கொண்டு பின்னர் இன்று திரும்பி கடலூருக்கு ஒரே இருசக்கர வாகனம் கேடிஎம்மில் மூவரும் சென்றுள்ளனர். அப்போது தரங்கம்பாடி பகுதியில் வந்து கொண்டிருந்தபோது தனியார் கல்லூரி அருகே இருசக்கர வாகனத்தில் வந்த தரங்கம்பாடியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் மீது எதிர்பாராத விதமாக மோதியதில் கேடிஎம் பைக்கில் சென்ற 3 பேரும் நிலை தடுமாறி சாலையில் கீழே விழுந்துள்ளனர். அப்போது எதிரே செங்கல்லை ஏற்றி வந்த டிராக்டர் கீழே விழுந்த மூவர் மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே 3 பேரும் தலை நசுங்கி உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து வந்த பொறையார் தீயணைப்பு மீட்பு படையினர் மற்றும் போலீசார் இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து மற்றொரு வாகனத்தில் வந்து படுகாயம் அடைந்த ஸ்ரீதரை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக பொறையார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலையில் அடிபட்டு எழும்பு முறிவு ஏற்பட்ட ஶ்ரீதர் மேல்சிகிச்சைக்காக நாகப்பட்டிணம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ஶ்ரீதரும் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக பொறையார் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *