மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கொடைக்காரமூலை பகுதியைச் சேர்ந்த ஆனந்தன். இவர் தமிழ்நாடு காவல்துறையில் 2009-ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் இணைந்து பணியாற்றி வந்தார். இவருக்கு ஆர்த்தி என்ற மனைவியும் லஷ்மிதா என்ற மகளும் லோக தர்ஷன் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் காவலர் ஆனந்தன் உயிரிழந்தார். அவருடைய குடும்பம் பயன்பெறும் வகையில் 2009-ஆம் ஆண்டு ஆந்தனுடன் பணியில் சேர்ந்த 4786 நபர்கள் இணைந்து ரூபாய் 24,49,844 தொகையை ஆனந்தின் மகள் லஷ்மிதா பெயரில் 10 லட்சமும், மகன் லோகதர்ஷன் பெயரில் 12 லட்சத்து 68 ஆயிரமும், மனைவி ஆர்த்தி பெயரில் வைப்புத் தொகையாக 1 லட்சத்தி 18 ஆயிரத்து 844 ஆகிய தொகையை அவர்களது வங்கி கணக்கில் செலுத்தி அதற்கான ஆவணங்களை குடும்பத்தினரிடம் வழங்கினர்.
மேலும் தமிழ்நாடு காவல்துறையில் 2009-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்களுக்கு எதிர்பாராத விதமாக இறப்பு ஏற்பட்டால் இந்தக் குழுவில் உள்ள நண்பர்கள் இணைந்து ஒவ்வொருவரிடமும் இழப்பீடு தொகை பெற்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்குவது வழக்கம். இதுவரை 2009-ஆண்டு குழுவில் 23 பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி அளித்துள்ளோம். பாதிக்கப்பட்ட காவலரின் குடுடும்பத்தின் வறுமையை போக்க வேண்டும் என்பது எங்களுடைய ஒருங்கிணைப்பு குழுவின் தலையாயக் கடமை. அந்த வகையில் இதுவரை எங்கள் குழுவில் 5 கோடியே 36 லட்சத்து 31 ஆயிரத்து 478 ரூபாய் நிதி அளித்து வந்துள்ளோம். இந்நிலையில் இன்று சீர்காழி பகுதியைச் சேர்ந்த மறைந்த காவலர் ஆனந்தன் குடும்பத்தாருக்கு நிதியளித்துள்ளோம் என்று ஒருங்கிணைப்பாளர்கள் கூறினார்கள் இந்நிகழ்வில் 50-க்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் மறைந்த காவலர் ஆனந்தனின் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.