மயிலாடுதுறை திருஇந்தளுர் ஶ்ரீ சாலக்கரை முனீஸ்வரர் ஆலயத்தின் சித்திரை திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ஹோமம் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மழை வேண்டியும், ஊர் செழிமையாக இருக்க வேண்டி புனித நீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு கணபதி ஹோமம், மகாமிருத்யுஞ்ஜய ஹோமம் மற்றும் சுதர்சன ஹோமங்கள் சிறப்பாக நடைபெற்றது. மகாபூரானாகுதி, தீபாரதனை செய்யப்பட்டு பூஜிக்கப்பட்ட புனிதநீரால் முனீஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து ஶ்ரீமுனீஸ்வருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது.