மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாலங்காடு கடைவீதியில் கௌதமன் என்பவர் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக அசைவ உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு சாப்பிடுவதற்காக பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வருகை தந்துள்ளனர். அதனை தொடர்ந்து எண்ணெய் ஊற்றாமல் தோசை வேண்டுமென இளைஞர்கள் கேட்டுள்ளனர். அப்போது கடை ஊழியர் தோசையில் எண்ணெய் ஊற்றி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் அனைவரும் சேர்ந்து கடை உரிமையாளர் கௌதமனை கடுமையாக தாக்கியுள்ளனர். கடையில் இருந்த சேர் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு உரிமையாளரை தாக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதில் காயமடைந்த கௌதமன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக கடை உரிமையாளர் கௌதமன் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் திருவாவடுதுறை பிள்ளையார் தோப்பு பகுதியை சேர்ந்த திவாகர், ராஜராஜன் மற்றும் சில இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்து குத்தாலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.