யாக சாலை அமைக்க தோண்டிய போது 22 ஐம்பொன் சிலைகள், 55 பீடம் மற்றும் 400 க்கும் மேற்ப்ட்ட செப்பேடுகள், பூஜை பொருட்கள் மீட்பு. 1000 ஆண்டுகள் முற்பட்டவையாக இருக்கலாம் என தகவல்.

செய்திகள்

சீர்காழி சட்டநாதர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாக சாலை அமைக்க தோண்டிய போது 22 ஐம்பொன் சிலைகள், 55 பீடம் மற்றும் 400 க்கும் மேற்ப்ட்ட செப்பேடுகள், பூஜை பொருட்கள் மீட்பு. 1000 ஆண்டுகள் முற்பட்டவையாக இருக்கலாம் என தகவல்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பழைய வாய்ந்த சட்டநாதர் கோவிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெறுவதற்காக கோவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது,மே மாதம் 24 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெவுள்ள நிலையில் யாகசாலை மண்டபம் அமைப்பதற்காக மண் எடுக்க கோயில் மேற்கு கோபுர வாயில் அருகே நந்தவனத்தின் உட்புறத்தில் ஜேசிபி இயந்திரம் கொண்டு பள்ளம் தோன்டியபோது 2 அடியில் புதைந்திருந்த ஐம்பொன் சிலைகளான விநாயகர், முருகர், வள்ளி, தெய்வானை, சோமஸ்கந்தர், அம்பாள், பூர்ண புஷ்கலா அய்யனார், திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் உள்ளிட்ட 22 ஐம்பொன் சிலைகளும்,அரை அடி முதல் 2 அடி உயரம் உடையது,மேலும் 400க்கும் மேற்ப்பட்ட திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற சீர்காழி பதிகம் தாங்கிய தேவார செப்பேடு ஆகியவை கண்டெடுக்கப்பட்டது.

அதனை தருமபுர ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரம்மாசாரியர் நேரில் பார்வையிட்டு அவைகள் எந்த காலத்துக்குரிய சிலைகள் என கேட்டறிந்தார், இதுவரையில் இதுபோன்று எங்கும் கிடைக்காத வகையில் ஒரே இடத்தில் 22 சிலைகளும் ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டதால் சீர்காழி பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது,இவை 1000 ஆண்டுகள் முற்பட்டதாக இருக்கும் என கருதபடும் நிலையில் இதனை அனைவரும் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். இதன் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *