சீர்காழி அடுத்த தொடுவாய் மீனவ கிராமத்தில் உள்ள 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுதேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா தமிழக வெற்றிக்கழகம் மாவட்ட மீனவரணி சார்பில் மாவட்ட மீனவரணி தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட தலைவர் குட்டி.கோபி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மடவாமேடு மீனவ கிராமத்தை சேர்ந்த 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் 582 மதிப்பெண்கள் பெற்று கொள்ளிடம் வட்டாரத்தில் சிறப்பிடம் பெற்ற மாணவி சமிக்க்ஷா, தொடுவாய் மீனவ கிராமத்தை சேர்ந்த 10 ஆம் வகுப்பு பொதுதேர்வில் 497 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவி ஹாசினி, திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தை சேர்ந்த 10 ஆம் வகுப்பு தேர்வில் 494 மதிப்பெண்கள் பெற்ற மாணவன் நகுலன் ஆகியோருக்கு பதக்கங்கள், சால்வை அணிவித்து ரொக்கபணம் வழங்கி கௌரவித்து பாராட்டினர்.
மேலும் விரைவில் தளபதி விஜய் தலைமையில் பாராட்டு விழாவில் நேரில் சந்திக்க தயாராக இருங்கள் என நிர்வாகிகள் தெரிவித்ததால் மாணவ – மாணவிகள் உற்சாகம் அடைந்தனர்.