சிறுமியிடம் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட நபருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகப்பட்டினம் முதன்மை சிறப்பு அமர்வு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.

செய்திகள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறுமியிடம் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட நபருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகப்பட்டினம் முதன்மை சிறப்பு அமர்வு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி உட்கோட்டத்தில் உள்ள பூம்புகார் காவல் நிலைய சரகத்திற்கு உள்பட்ட தருமகுளம் கிராமத்தில் 2017-ஆம் ஆண்டு 16 வயது சிறுமியிடம், நெய்தவாசல் வடபாதி தெருவைச் சேர்ந்த கலைவாணன் மகன் மதுபாலன் என்பவர் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து நாகப்பட்டினம் முதன்மை சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று மதுபாலனுக்கு பிரிவு 6 உடன் இணைந்த 5(1)-ன்படி 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.20,000 அபராதம் விதித்து, கட்டத் தவறினால் மேலும் ஒரு வருடம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும், பிரிவு 506(ii)-ன்படி 7 வருடம் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் அபராத தொகை ரூ.5,000 விதித்தும், கட்டத்தவறினால் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி மணிவண்ணன் தீர்ப்பளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *