மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து வகை மீன்பிடி விசைப்படகுகளுக்கு மே 28-ஆம் தேதியும், நாட்டுப்படகுகளுக்கு ஜூன் 13-ஆம் தேதியும் ஆய்வு செய்யப்பட உள்ளதால் படகு உரிமையாளர்கள் தயார் நிலையில் இருக்க மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அறிவுறுத்தல்:-

செய்திகள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து வகை மீன்பிடி விசைப்படகுகளுக்கு மே 28-ஆம் தேதியும், நாட்டுப்படகுகளுக்கு ஜூன் 13-ஆம் தேதியும் ஆய்வு செய்யப்பட உள்ளதால் படகு உரிமையாளர்கள் தயார் நிலையில் இருக்க மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அறிவுறுத்தல்:-

தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குப்படுத்தும் சட்டம் 1983-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட  மற்றும் பதிவு செய்யப்படாத மீன்பிடிக் கலன்கள் அனைத்தும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையரால் நியமிக்கப்படும் பணியாளர்களைக் கொண்டு ஆண்டுக்கு ஒருமுறை நேரடி களஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிகழாண்டுக்கு மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை மீன்பிடி விசைப்படகுகளுக்கு மே 28-ஆம் தேதியும், நாட்டுப்படகுகளுக்கு ஜூன் 13-ஆம் தேதியும் மீன்வளம் மற்றும் மீனவர்  நலத்துறை அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட உள்ளது. படகு உரிமையாளர்கள் படகுகளின் பதிவுச் சான்று, மீன்பிடி உரிமம், வரி விலக்களிக்கப்பட்ட டீசல் எரியெண்ணெய் அட்டை, துறை மூலம் வழங்கப்பட்ட தொலைத்தொடர்பு கருவிகள் ஆகியவைகளை தயார் நிலையில்  வைத்திருந்து, ஆய்வு செய்யும் நாளில் ஆய்வுக்குழுவிற்கு அனைத்து விவரங்களையும் அளித்திட வேண்டும்.

மேலும், அனைத்து மீன்பிடிப் படகுகளுக்கும்  மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் வாயிலாக தெரிவிக்கப்பட்ட வர்ணம் பூசி ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். மேலும் விற்பனை வரி விலக்களிக்கப்பட்ட எரியெண்ணெய் வாங்கும் படகுகள் நேரடி ஆய்வின் போது ஆய்விற்கு உட்படுத்தவில்லையெனில் அப்படகுகளுக்கு விற்பனை வரி விலக்களிக்கப்பட்ட டீசல் எரியெண்ணெய் நிறுத்தம் செய்யப்படுவதுடன், அப்படகுகள் இயக்கத்தில் இல்லாததாக் கருதி அப்படகுகளின் பதிவு சான்றினை உரிய விசாரணைக்கு பின் ரத்து செய்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆய்வு நாளன்று படகினை ஆய்வுக்கு உட்படுத்தாமல் பின்னொரு நாளில் ஆய்வு செய்யக்கோரும் படகு உரிமையாளர்களின் கோரிக்கை ஏற்கப்பட மாட்டாது என அனைத்து படகு உரிமையாளர்களுக்கும் அச்செய்திக்குறிப்பின் வாயிலாக மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *