மயிலாடுதுறை அருகே சேத்திரபாலபுரத்தில் புதியதாக அமைய உள்ள அரசு மதுபான கடையை தடுத்து நிறுத்துவது தொடர்பாக கிராம மக்கள் ஆலோசனைக் கூட்டம் ஏராளமானோர் பங்கேற்பு.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே சேத்திரபாலபுரம் காவிரி கரையில் மக்கள் பயன்பாட்டில் உள்ள பிரதான சாலையில் புதிதாக தொடங்க உள்ள அரசு மதுபான கடையை தடுத்து நிறுத்த கோரி சேத்திரபாலபுரம், அரையபுரம், கடலங்குடி தொழுதலாங்குடி ஆகிய 4 கிராம மக்கள் மற்றும் பல்வோறு கட்சிகள் சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த பகுதியில் அரசு மதுபாண கடையை திறக்க கூடாது என இரண்டு மாதங்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதை கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம் புதிய மதுபாண கடையை திறப்பதற்கான பணியை மேற்கோண்டு வருகிறது. இதனால் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ – மாணவிகள், பணிக்கு செல்லும் பெண்கள் உள்ளிட்ட அனைவரும் பாதிக்கபடும் சூழல் உள்ளதால் புதிய மதுபாண கடையை திறக்க கூடாது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகம் இதை கண்டுகொள்ளாவிட்டால் சாலைமறியல் போராட்டம் நடத்தப்போவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்
இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள், அனைத்துக் கட்சி நிர்வாகிகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் கிராம மக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.