சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து, ரோஜாப்பூ மலர் தூவி, ஆரத்தி எடுத்து, சால்வை அணிவித்து இனிப்பு வழங்கி ரெட் கார்பெட் வரவேற்பு.

செய்திகள்

மயிலாடுதுறையில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து, ரோஜாப்பூ மலர் தூவி, ஆரத்தி எடுத்து, சால்வை அணிவித்து இனிப்பு வழங்கி ரெட் கார்பெட் வரவேற்பு; மாணவர்களும், பெற்றோர்களும் நெகிழ்ச்சி:-

நாடு முழுவதும் கடந்த 13-ஆம் தேதி சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தம் ஒன்பது சிபிஎஸ்சி பள்ளிகள் உள்ளன. இதில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மயிலாடுதுறையில் உள்ள எவரெஸ்ட் கென்பிரிட்ஜ் தனியார் பள்ளி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தது. இப்பள்ளியில் பயிலும் மாணவர் குருநாதன் 492 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார். மேலும் இப்பள்ளி மாணவிகள் ரேஷ்மி 474, மதிப்பெண்களும், விஸ்வஜா 471 மதிப்பெண்களும் எடுத்து பள்ளியில் இரண்டு, மூன்றாம் இடமும் பிடித்தனர். இந்த  மாணவர்கள் அனைவரும் கோடை விடுமுறைக்காக வெளியூர் சென்று இருந்த நிலையில் இன்று பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு பள்ளி முதல்வர் மாலை அணிவித்தார். அதனைத் தொடர்ந்து மாணவர்களை ஆசிரியர்கள் ரோஜா பூ மலர் தூவி உற்சாகமாக சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்று பள்ளிக்குள்ளே அழைத்து சென்று ஆரத்தி எடுத்து மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினர். பெற்றோர்கள் மாணவர்களுக்கும் பள்ளி நிர்வாகி சார்பில் சால்வை அணிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களும், பெற்றோர்களும்‌ நெகிழ்ச்சி அடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *