மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா ஆக்கூர் தாகூர் வீதியைச் சேர்ந்த மூதாட்டி ஜலகாம்பாள்(75). இவர் பொறையாரில் உள்ள தன் மகள் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் ஆக்கூர் செல்வதற்காக இன்று காலை பொறையார் பேருந்து நிலையத்திற்கு சென்ற போது மயிலாடுதுறையிலிருந்து பொறையார் பேருந்து நிலையத்திற்குள் வந்த A 27 B (TN49 N- 1981) என்ற எண் கொண்ட அரசு பேருந்து எதிர்பாராத விதமாக மூதாட்டியின் மீது மோதியதில் பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த பொறையார் போலீசார் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.