27-வது தேசிய பெடரேஷன் கோப்பை சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில், மே 14-ஆம் தேதி நடைபெற்ற பெண்களுக்கான போல் வால்ட் போட்டியில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் சேத்திரபாலபுரத்தில் வசிக்கும் விவசாயி இளங்கோவன் என்பவரது மகள் தற்பொழுது ரயில்வே துறையில் எழுத்தராக பணியாற்றி வரும் போல் வால்ட் வீராங்கனை பரணிகா 4 மீட்டர் உயரம் தாண்டி, இரண்டாவது இடம் பிடித்து, வெள்ளிப்பதக்கம் தட்டிச் சென்றார். இந்த போட்டியில் பரணிகா பங்கேற்ற விடியோ தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தின் ரோசி மீனா 4.05 மீட்டர் உயரம் தாண்டி முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.