மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருக்குறையலூரில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த புகழ்பெற்ற பஞ்ச நரசிம்ம ஆலயங்களில் முதலாவது ஆலயமாக உக்கிர நரசிம்மர் ஆலயம் அமைந்துள்ளது. வைணவ ஆழ்வார்களில் திருமங்கை ஆழ்வார் அவதாரம் செய்த இந்த ஊரில் அமைந்துள்ள இந்த ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். இன்று நரசிம்மர் ஜெயந்தியை முன்னிட்டு உக்கிரநரசிம்மர் ஆலயத்தில் நவக்கிரக ஹோமம் நடைபெற்றது.யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித கடங்கள் ஆலய வெளிப்பிரகாரத்தில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து உக்கிர நரசிம்ம பெருமாள் மற்றும் தாயாருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேக ஆராதனைகள், மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.