மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே இலுப்பப்பட்டு கிராமத்தில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் ஆலயத்தில் உள்ள வள்ளி தெய்வானை உடனுறை ஸ்ரீ முருகப்பெருமாள் ஆலயத்தில் வைகாசி விசாக பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கொள்ளிடம் ஆற்றங்கரையிலிருந்து மேள வாத்தியங்கள் முழங்க பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.
பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த பாலினை கொண்டு முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பக்தர்கள் பலர் பங்கேற்று அரோகரா என கோஷமிட்டபடி முருகப்பெருமானை வழிபாடு மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இன்னிசை கச்சேரியில் ஏராளமான சிறுமிகள் பங்கேற்று பக்தி பாடல்களை பாடி அசத்தினர்.