மயிலாடுதுறையில் மூவேந்தர் முன்னேற்ற கழகம் சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு, பொதுமக்களுக்கு வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில் குடைகளை வழங்கி உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க பண்டைய தமிழர் முறைப்படி நல்லெண்ணெய் சீயக்காய் கொடுத்து விழிப்புணர்வு.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை, கூறைநாடு கடைவீதியில் மூவேந்தர் முன்னேற்றக் கழகம் சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. மாநில இளைஞரணி துணை செயலாளர் கில்லி பிரகாஷ் ஏற்பாட்டின் பேரில் நீர் மோர் பந்தல் துவக்கப்பட்டது. இதில் பொது மக்களுக்கு வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில் குடைகளை வழங்கி குளிர்ச்சி தரும் வகையில் நீர் மோர், இளநீர், வெள்ளரிக்காய், தர்பூசணி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து கடும் கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் பண்டைய தமிழர் முறைப்படி வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்து குளிப்பதை ஊக்குவிக்கும் வகையில் நல்லெண்ணெய் சீயக்காய் பொடி வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.