மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் மறைந்த முன்னாள் வன்னியர் சங்க மாநிலத் தலைவர் காடுவெட்டி ஜெ.குருவின் ஆறாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. பாமக மாவட்ட செயலாளர் லண்டன் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஜெ.குருவின் உருவப்படத்திற்கு பாமக மற்றும் வன்னியர் சங்க மாநில, மாவட்ட, நகர நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் தஞ்சை மண்டல பொறுப்பாளர் ஐயப்பன், வன்னியர் சங்க மாநில செயலாளர் தங்கஅய்யாசாமி, முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர்கள் காமராஜ், குத்தாலம் கணேசன், நகர தலைவர் குமரேசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு வீரவணக்கம் முழக்கமிட்டு அஞ்சலி செலுத்தினர்.