ரமலான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் பங்கேற்பு.

செய்திகள்

மயிலாடுதுறை அருகே நீடூரில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஒரே இடத்தில் 2ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிறப்பு தொழுகை. முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் பங்கேற்பு:-

இஸ்லாமிய நாட்காட்டியின்படி ரமலான் மாதமானது இஸ்லாமிய மக்களின் மிக முக்கியமான புனித மாதம் ஆகும்.  நோன்பு இருக்கும் இஸ்லாமியர்கள் முதல்  பிரை தினத்தில்  ரமலான் பண்டிகையை  நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் ரமலான் பெருநாள் பண்டிகை இஸ்லாமியர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மயிலாடுதுறை அருகே நீடூர் கிராமத்தில் இஸ்லாமியர்கள் அப்துல் கரீம் ஹஜ்ரத் நினைவரங்கத்தில்  ரமலான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். அரபிக் கல்லூரி முதல்வர் முகமது இஸ்மாயில் பாசில் பாக்கவி தலைமையில்  2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒரே நேரத்தில்  உலகில் அன்பும் அறமும் மனிதநேயமும் தழைத்தோங்கவும் ஒற்றுமையுடன் வாழவும் சிறப்பு தொழுகை நடத்தினர். பின்னர் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். தொடர்ந்து நண்பர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மணிசங்கர் ஐயர் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் கலந்துகொண்டு இஸ்லாமியர்களுக்குரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு புகைப்படம் எடுத்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *