திமுக இளைஞரணி சார்பில் கலைஞர் நூலகம் திறப்பு. காலத்தால் அழியாத நூற்றுக்கணக்கான நூல்கள் இடம் பெற்றுள்ள நூலகத்தை திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்எல்ஏ திறந்து வைத்தார்.

செய்திகள்

மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தலில் திமுக இளைஞரணி சார்பில் கலைஞர் நூலகம் திறப்பு. நெஞ்சுக்கு நீதி உள்ளிட்ட கலைஞரின் காலத்தால் அழியாத நூற்றுக்கணக்கான நூல்கள் இடம் பெற்றுள்ள நூலகத்தை திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்எல்ஏ திறந்து வைத்தார்:-

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் ஊராட்சியில் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திமுக இளைஞரணி சார்பில் கலைஞர் நூலகம் திறப்பு விழா மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மருது தலைமையில் நடைபெற்றது. இந்த நூலகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் காலத்தால் அழியாத காவியங்களான நெஞ்சுக்கு நீதி, குறளோவியம், கலைஞரின் கடிதங்கள் உள்ளிட்ட ஏராளமான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த நூலகத்தை திமுக மாவட்ட செயலாளர் நிவேதா.எம்.முருகன் எம்எல்ஏ, திமுக இளைஞர் அணி மாநில துணை செயலாளர் இளையராஜா ஆகியோர் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் மயிலாடுதுறையை அடுத்த பல்லவராயன்பேட்டை நரிக்குறவர் குடியிருப்பில் வசிக்கும் நரிக்குறவர் சமுதாய மாணவர்கள் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி அடைந்த 9 பேருக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக அவர்களுக்கு சால்வை அனிவித்து ஊக்கத்தொகையானது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *